மருத்துவ குறிப்பு
மனவளர்ச்சிக் குறைபாடுள்ள குழந்தைகள் யார்?
-Dr.S.வெங்கடாசலம்.
---------------------------------
1989 ல் உலக சுகாதார நிறுவனம் [ W.H.O.] மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் யார் என வரையறை செய்துள்ளது.
# மற்ற குழந்தைகள் போல் எளிதில் அல்லது முற்றிலும் எந்த ஒரு செயலையும் கற்றுக் கொள்ளவோ, செயலாற்றவோ இயலாத குழந்தைகள்.
# அறிதிறன் குறைபாடுள்ளவர்கள்.
# மற்றவர்கள் அறியும் வகையில் தங்கள் குறைகளை, தேவைகளை எடுத்துரைக்க இயலாதவர்கள்.
# கை கால்களை இயக்குவதில் இயலாமையோ, இடம் விட்டு இடம் நகர்வதில் இயலாமையோ, கீழே அம்ர்ந்து எழுதுவதில் இயலாமையோ உள்ளவர்கள்.
# முழுமையான நினைவாற்றல் இல்லாதவர்கள் அல்லது குறைவான நினைவாற்றல் உள்ளவர்கள்.
# சிந்தனை ஒருமுகத் திறன் இல்லாதவர்கள்.
# கால நேர நிலைகள் பிரித்தறிய இயலாதவர்கள்.
# முடிவு எடுப்பதில் திறனின்றி இருப்பவர்கள்.
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின்
விநோதமான செய்கைகள்....
-----------------------------
# காரணமின்றிச் சிரிப்பது
# விசித்திரமான ஒலி எழுப்புவது.
# உளறுவது அல்லது ஒரே வார்த்தையைத் திரும்பத் திரும்பக் கூறுவது.
# வேண்டாத பொருட்களுடன் விளையாடுவது.
# வேண்டுமென்றே பிறரை அல்லது பிறர் பொருட்களைத் தொடுவது.
# திடீர் திடீரென அணைத்துக் கொள்வது, முத்தமிடுவது.
# தலையை ஆட்டுவது
மனவளர்ச்சிக் குறைபாடு -
ஹோமியோபதி சிகிச்சை
-------------------------------------------
இப்பிரச்சினைக்கு ஆங்கில மருத்துவத்தில் சிகிச்சை அளிப்பது கடினம். பொதுவான ஊட்டத்திற்கான மருந்து கள், டானிக்குகள் தவிர நேரடியான சிகிச்சைக்கான மருந்து ஏதுமில்லை.
ஆயுர்வேதத்தில் சில மருந்துகள் பயன்படுகின்றன. ஆயினும் அவற்றின் பயன்விளைவுகள் பலருக்கும் ஒரே மாதிரியாய் அமைவதில்லை; குழந்தைகளின் மனவளர்ச்சிக் குறைபாட்டில் ஆயுர்வேத சிகிச்சைகளின் வெற்றி சதவீதம் மிகக் குறைவே.
ஹோமியோபதி மருத்துவத்தில் வெற்றி சதவீதம் குறிப்பிடத் தக்கது.பயன்களோ கண்கூடானது.சிகிச்சை ஆரம்பித்த ஓரிரு மாதங்களிலேயே முன்னேற்றத்திற் கான அறிகுறிகளைக் காண முடியும்.குழந்தைகளின் அறிதிறனில் வளர்ச்சியும், நடத்தைகளில் முன்னேற்ற மும் 1 முதல் 2 ஆண்டுகளில் அடைய முடியும்.
மனவளர்ச்சிக் குறைபாடுள்ள குழந்தைகளின் LOW I.Q.வை முன்னேற்ற உதவும் முக்கியமான ஹோமியோ மருந்துகள்;
BARYTA CARB, CARCINOSIN, AETHUSA, BARYTA MUR, BUFO, CALCARIA PHOS, CARB SULPH, HELLEBORUS NIGER, MEDORRHINUM, PHOSPHOROUS, TUBERCULINUM, AGARICUS, ANACARDIUM, ANTIM CRUDE, BELLADONNA, CAPSICUM, CHAMOMILLA, HYOSCYAMUS, MERCURIUS, NATRUM MUR, NUX VOMICA, PLUMBUM MET, STRAMONIUM, TABACUM AND SOME OTHER MEDICINES
தகவல்
DR.oshomurali Salem
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0