தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்
சேலம் ஜன 07 - தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு மாநில தலைவர் நாகா.அரவிந்தன் தலைமை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஆந்திர மாநிலம் ஈஸ்ட் கோதாவரி அருகில் அமைந்துள்ள பெனுகொண்டா ஆர்ய வைஸ்ய குல தெய்வமான வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் பிறந்த இடமான ஊரை வாசவி பெணுகொண்டா என்று பெயரை மாற்றிய ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுக்கும் மற்றும் ஆந்திர மாநில அரசுக்கும் நன்றியை தெரிவித்தும்,பொங்கல் பண்டிகை முன்னிட்டு அடித்தட்டு மக்கள் பயன்பெறும் வகையில் பொங்கல் பரிசு உடன் ரூபாய் 3000 ரொக்க பரிசினை அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது மேலும் தற்போது நடைபெற உள்ள 2026 சட்
டமன்றத் தேர்தலில் தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு யாருக்கு ஆதரவு தருவது அல்லது தேர்தல் போட்டியிடுவதா என்பது குறித்து பிப்ரவரி 8ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் மண்டல மாநாட்டில் அறிவிக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் முரளி, கேசவன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
2
Dislike
1
Love
0
Funny
0
Angry
1
Sad
1
Wow
0