சுற்றுலாத்துறை அமைச்சர் இராஜேந்திரன் அவர்கள் சேலம் சிறுமலர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்கள்
மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.இரா.இராஜேந்திரன் அவர்கள்
சேலம் சிறுமலர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்கள்.
மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.இரா.இராஜேந்திரன் அவர்கள்
சேலம், சிறுமலர் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு
மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப.,
அவர்கள், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.எம்.செல்வகணபதி அவர்கள்,
சேலம் மாநகராட்சி மேயர் திரு.ஆ.இராமச்சந்திரன் அவர்கள் ஆகியோர்
முன்னிலையில் இன்று (17.11.2025) வழங்கினார்கள். பின்னர், மாண்புமிகு
சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த நான்கரை ஆண்டுகளில்
பள்ளிக் கல்வித்துறைக்கென அதிகளவிலான நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு
சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் சேலம்
மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் 87,209 குழந்தைகளும்,
புதுமைப்பெண் திட்டத்தில் 33,419 மாணவிகளும், தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் 17,760
மாணவர்களும், நான் முதல்வன் திட்டத்தில் 9-12 ஆம் வகுப்பு வரை 1,34,361 மாணவ
மாணவிகளும், பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தில் மாநில
அளவில் ரூ.7500 கோடி மதிப்பீட்டில் நவீனமாக்கும் திட்டமும், இல்லம் தேடிக்கல்வி
திட்டத்தில் 10,589 மையங்களில் 1,74,107 மாணவர்கள் பயன் பெற்று சேலம்
முதலிடம் பெற்றுள்ளது.
மேலும், எண்ணும் எழுத்தும் இயக்கத்தில் 1,75,165 மாணவர்களும், பள்ளி
செல்லாப் பிள்ளைகளைக் கண்டறிய செயலி, உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள்,
வகுப்பறை உற்று நோக்கு செயலி, முத்தமிழறிஞர் மொழி பெயர்ப்புத் திட்டம்,
இளந்தளிர் இலக்கியத் திட்டம், மாதிரிப் பள்ளிகள், தகைசால் பள்ளிகள், ஸ்மார்ட்
வகுப்பறைகள் என பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை அறிவித்துச்
செயல்படுத்தி வருகிறார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களால் 14.11.2025 அன்று
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடப்பாண்டிற்கான மிதிவண்டிகள் வழங்கும்
திட்டத்தினை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, சேலம் மாவட்டம், வேம்படிதாளம்
அரசு மேல்நிலைப்பள்ளியில் வேம்படிதாளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 84
மாணவர்களுக்கும் மற்றும் 77 மாணவிகளுக்கும் மொத்தம் 161 மிதிவண்டிகள் வழங்கி
இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் 2021-2022-ஆம் கல்வி ஆண்டு முதல் கடந்த 4
ஆண்டுகளில் மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு
உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற 51,058 மாணவர்களுக்கும், 55,123
மாணவிகளுக்கும் ஆக மொத்தம் 1,06,181 மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. சேலம்
மாவட்டத்தில் 2025-2026- ஆம் கல்வி ஆண்டிற்கான மிதிவண்டிகள் வழங்கும்
திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவிபெறும் 178 பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு
பயிலும் 11,317 மாணவர்களுக்கும். 13,842 மாணவிகளுக்கும் ஆக மொத்தம் 25,159
மாணாக்கர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளது.
இன்றையதினம், சேலம், சிறுமலர் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில்
பயிலும் 375 மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசால்
செயல்படுத்தக்கூடிய இதுபோன்ற பல்வேறு திட்டங்களை பள்ளி மாணவர்கள்
நல்லமுறையில் பயன்படுத்தி தங்கள் வாழ்வில் சிறந்த நிலையை அடைய
வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாண்புமிகு சுற்றுலாத்துறை
அமைச்சர் திரு.இரா.இராஜேந்திரன் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலர்கள் திரு.நரசிம்மன்,
திரு.பாலமுருகன், பள்ளி தலைமை ஆசிரியர் திரு.லூயி பெர்னான்டோ, மாமன்ற
உறுப்பினர் திருமதி கிரிஜா குமரேசன் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின்
பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்
கலந்துகொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0