செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 89-வது நினைவு நாள்
வணிகத்தால் நம்மை அடிமைப்படுத்திய ஆதிக்க கூட்டத்தை அதே வணிகத்தால் அசைத்துப் பார்த்த வ. உ. சிதம்பரனாரின் நினைவு நாள் இன்று.
ஆங்கிலேயர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல இந்தியர்கள் என்பதை நிரூபிக்க, சுதேசி கப்பல் நிறுவனத்தால் வணிகப் போர் தொடுத்த நம் வ. உ. சி. அவர்களின் இழப்பும் - தியாகமும் எண்ணிலடங்காதவை.
கப்பலோட்டிய தமிழர் வ. உ. சிதம்பரனாரின் நினைவு நாள் தியாகத் திருநாளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் அவரின் வீரத்தையும் - தியாகத்தையும் போற்றுவோம்..!
"செக்கிழுத்த செம்மல்" வ. உ. சிதம்பரனாரின் திருவுருவ சிலைக்கு தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு சார்பாக
மாநில தலைவர் நாகா ஆர்.அரவிந்தன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
இதில் செயலாளர் முரளி, கேசவன் பலர் கலந்து கொண்டனர்
What's Your Reaction?
Like
0
Dislike
1
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0