சேலம் மாவட்ட குற்றவியல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Dec 17, 2025 - 13:20
 5
சேலம் மாவட்ட குற்றவியல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

குற்றவியல் வழக்குறைஞர்கள் சங்கம்  ஆர்ப்பாட்டம்

சேலம் 17 /12 /2025..... சேலம் மாவட்ட குற்றவியல் வழக்குரைஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.... சேலம் மாவட்ட குற்றவியல் வழக்குறைஞர்கள் சங்கத்தின் சார்பில், தலைவர் ஜெ.மு.இமயவரம்பன் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம், அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின், நுழைவாயில் முன்பு நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நீதிமன்றங்களில், வழக்குகள் சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் இ ஃபைலிங் முறையில் பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தியும், இதனால் வழக்குரைஞர்கள் மட்டுமின்றி பொதுமக்களும், அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என புகார் தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் குற்றவியல் வழக்கு சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
NAGA R.ARAVINTHAN உடனுக்கு உடன் செய்திகள்