சேலம் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் 10 வினாடிகளில் பார்வையைச் சரிசெய்யும் 'ஸ்மைல் புரோ' சிகிச்சை அறிமுகம்

Nov 13, 2025 - 13:47
Nov 13, 2025 - 13:48
 21
சேலம் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் 10 வினாடிகளில் பார்வையைச் சரிசெய்யும் 'ஸ்மைல் புரோ' சிகிச்சை அறிமுகம்

சேலம் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் 10 வினாடிகளில் பார்வையைச் சரிசெய்யும் 'ஸ்மைல் புரோ' சிகிச்சை அறிமுகம்

ஸ்மைல் புரோ என்பது, உலகின் முதல் ரோபோட்டிக் முறையிலான, மடிப்பில்லாத, குறைந்த ஊடுருவல் கொண்ட லேசர் திருத்த சிகிச்சை செயல்முறை உத்தியாகும்; மென்மையானதாகவும் மற்றும் வலியற்ற சிகிச்சையாகவும் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
நவம்பர் 30 -ம் தேதி வரை ஸ்மைல் புரோ பார்வைத்திறன் மதிப்பீடு மற்றும் ஸ்மைல் புரோ அறுவைசிகிச்சைக்கான கட்டணம் மீது 50% தள்ளுபடியை இம்மருத்துவமனை வழங்குகிறது.

சேலம்: 13 நவம்பர் 2025: டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, சேலம் ஸ்மைல் புரோ (சிறிய கீறல்
வழியாக கருவிழியை சரிசெய்தல்) என்ற உலகின் முதல் மற்றும் ஒரே ரோபோட்டிக் அறுவைசிகிச்சை திட்டத்தை இம்மாநகரில் தொடங்கியிருக்கிறது. 10 நொடிகளுக்கும் குறைவான நேரத்தில் கிட்டப்பார்வை மற்றும் சிதறல் பார்வையை சரிசெய்வதற்கு ஒரு குறைவான ஊடுருவல் உள்ள மற்றும் அதிக துல்லியமான சிகிச்சை முறை இது. இந்த சிகிச்சைக்குப் பிறகு கண் கண்ணாடிகளைப் பயன்படுத்த வேண்டியதில்லை.

சேலம் மாநகரின் காவல்துறை ஆணையர் அனில் குமார் கிரி. ஐபிஎஸ், இந்த நவீன சிகிச்சை திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகளுக்கான பிராந்திய தலைவர் டாக்டர். E. கற்பகவள்ளி மற்றும் மருத்துவ சேவைகளுக்கான பிராந்திய தலைவர் டாக்டர். ரம்யா சம்பத் ஆகியோர் இந்நிகழ்வில் முன்னிலை வகித்தனர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
NAGA R.ARAVINTHAN உடனுக்கு உடன் செய்திகள்